உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி எண்ணிக்கையை குறைத்திருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதியின் வாக்கு வங்கி ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது எனவும், வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்த தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றி எண்ணிக்கையை குறைத்திருப்பதாகவும் அகிலேஷ் யாதவ் கூறினார். கடந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த சமாஜ்வாதி, தற்போது 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த கட்சிக்கு 32 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலைவிட சமாஜ்வாதி கட்சிக்கு இந்த தேர்தலில் 10சதவீதம் அதிகமாக வாக்குகள் கிடைத்துள்ளன.
அதேபோல, கடந்த 2017 தேர்தலில் 312 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க. தற்போது 273 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.