பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆபாரமாக வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியை ஆம் ஆத்மி தோற்கடித்து பஞ்சாபில் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆம் ஆத்மிக்கு பல்வேறு கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த ட்வீட்டில், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாப் நலனுக்கான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதியளிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க முடிவு: பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர வாய்ப்பு