மும்பை:புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ‘பேடிஎம் பேமன்ட்’ வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
மின்னணு தொழில்நுட்பத்தில் பணப் பரிவர்த்தனை சேவைகளை பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது. இந்நிறுவனம் பேடிஎம் பேமன்ட் பேங்க்’என்ற பெயரில் 2017ல் வங்கிச் சேவையை துவக்கியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:பேடிஎம் பேமன்ட் வங்கியின் மேற்பார்வை தொடர்பான பிரச்னைகள் காரணமாக அவ்வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேடிஎம் வங்கியின் தகவல் தொழில்நுட்ப செயல் திட்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்பணிக்காக தகவல் தொழில்நுட்ப தணிக்கை நிறுவனத்தை நியமிக்க பேடிஎம் பேமன்ட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தணிக்கை நிறுவனத்தின் ஆய்வறிக்கையை ஆராய்ந்த பின் புதிய வாடிக்கையாளர் களை சேர்க்க அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மும்பை:புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ‘பேடிஎம் பேமன்ட்’ வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மின்னணு தொழில்நுட்பத்தில் பணப் பரிவர்த்தனை சேவைகளை பேடிஎம் நிறுவனம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.