பேடிஎம் பேமன்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் டீ கடைகள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேடிஎம் பேமன்ட் பேங்க், என்ற புது சேவையை பேடிஎம் துவக்கியுள்ளது. இதன் மூலம் இணைய வழி பணப்பரிவர்த்தனை எளிய வழியில் செய்ய முடியும். இதில் கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையும் பேடிஎம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பேடிஎம் பேமென்ட் பேங்க், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பண பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் முறையாக வங்கி பின்பற்றாததாலும், வருமான வரி தணிக்கை ஆய்வறிக்கையின் அடிப்படையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் பேமன்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இணைய வழி வர்த்தக நிறுவனமான பேடிஎம் சேவையை தனியார் நிறுவனங்கள் முதல் டீ
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.