போபால்:
உத்தர பிரசேதம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதேபோன்று அடுத்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜக சாதனை படைக்கும் என பாஜக மத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2003ம் ஆண்டு 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் 173 இடங்களை பாஜக கைப்பற்றி, திக்விஜய சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை அகற்றிய சாதனை 2023ல் முறியடிக்கப்படும்.
பாஜக எழுச்சி பெற்றுள்ளது. சித்தாந்தம் இல்லாத காங்கிரஸ் கட்சி, அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் சிதைந்துவிடும்.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் மாற்றம் மற்றும் வளர்ச்சியை கொடுத்ததால், பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, மத்திய பிரதேசத்தில் அதேபோன்ற செயல்திறனை வெளிப்படுத்த முடியாது. அவர்களின் யுக்தி பெரிய மாநிலத்தில் எடுபடாது.
இவ்வாறு உமா பாரதி கூறினார்.
இதையும் படியுங்கள்… இந்த பணிகளில் எல்லாம் தீவிர கவனம் செலுத்துங்கள்… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்