சிம்புவின் கம்பேக் படமாக வெளியான ‘மாநாடு’ ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்து. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனையடுத்து சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மிஸ்டர் பர்பெக்ட் என சொல்லும் அளவிற்கு சிம்புவின் செயல்பாடுகள் மாறியுள்ளனர். தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளைஎல்லாம் உடைந்தெறிந்து வருகிறார். ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட
சிம்பு
, கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
‘மாநாடு’ படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக
ஐசரி கணேஷ்
தயாரித்து வருகிறார். ‘மாநாடு’ படம் ரிலீசாவதற்கு முன்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படத்தில் நடித்து கொடுப்பதாக கமிட் ஆனார் சிம்பு. அப்போது சிம்பு சம்பளமாக 10 கோடி பேசப்பட்டது.
Etharkkum Thunindhavan: பிளாக் பஸ்டர்.. வேற லெவல்.. சூர்யாண்ணா மாஸ் பண்ணிட்டாரு..!
வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் ‘கொரொனோ குமார்’ படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. இந்தப்படமும் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ‘மாநாடு’ வெற்றிக்கு பின்னர் சிம்புவின் மார்கெட் தற்போது எகிறியுள்ளது. இதனால் சிம்பு தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‘கொரொனோ குமார்’ படத்திற்கு ஆரம்பித்தில் பேசிய சம்பளத்தை விட கூடுதலாக தற்போது சிம்பு கேட்கிறாராம்.
இதனால் ஐசரி கணேஷ் தற்போது சிம்பு மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். இதன் காரணமாக ‘கொரொனோ குமார்’ படம் ட்ராப் ஆகவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் சிம்புவுடன்
அதிதி ஷங்கர்
,
பகத் பாசில்
உள்ளிட்டோர் நடிப்பதாக கஎல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘கொரொனோ குமார்’ படம் ட்ராப் ஆக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எதற்கும் துணிந்தவன்” படம் எப்படி இருக்கு?