உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான சாம்சங் ப்ரீமியம் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டிவிட்டு முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், உலகளவில் 5ஜி சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அடுத்த ஒரு வருடத்தில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தைச் சரியான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
எங்களுக்கு அந்த லாபமே வேண்டாம்.. ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு..!
சாம்சங்
சாம்சங் இந்தியாவில் தனது புதிய பிளாக்ஷிப் போன் ஏஸ்22-ஐ மார்ச் 11ஆம் தேதி முதல் விற்பனை செய்யத் துவங்கியுள்ள நிலையில், ப்ரீமியம் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்த்த ஏஸ்22 சீரியஸ் போன் மட்டும் அல்லாமல் சாம்சங் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தை
டிசம்பர் மாத இறுதியில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் 44 சதவீத வர்த்தகத்தைக் கொண்டு ஆப்பிள் முதல் இடத்தில் ஆதிக்கம் செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து ஓன்பிளஸ் மற்றும் சாம்சங் அடுத்த இரண்டு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையை மாற்ற முக்கியமான திட்டத்தைத் தீட்டியுள்ளது.
5ஜி பிரிவில்
மேலும் சாம்சங் 5ஜி பிரிவில் மட்டும் இதுவரை 14 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், 5ஜி எகோசிஸ்டத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யவும் பல புதிய கருவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதோடு 5ஜி கருவிகளைத் தனி வர்த்தகப் பிரிவாகவே நிர்வாகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது சாம்சங்.
முக.ஸ்டாலின்
இந்நிலையில் வருகிற மார்ச் 15ஆம் தேதி சென்னை ஐடிசி ஹோட்டலில் சாம்சங் மற்றும் தமிழக அரசு ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இந்திய தலைவர் கென் காங் கலந்துகொள்ள உள்ளனர்.
உற்பத்தி தளம்
சமீபத்தில் இந்தியாவில் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தனது உற்பத்தி தளத்தை அமைத்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான உற்பத்தி தளத்தைத் தமிழ்நாட்டில் அமைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஆப்பிள் ஷாக்
சாம்சங் இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில், தற்போதைய விலை அளவுகளை விடவும் குறைவான விலையில் சாம்சங் போன்களைக் கொடுக்க முடியும். இதனால் கட்டாயம் ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கும்.
Samsung has big plan for India; MoU Signing with Government of Tamil Nadu on March 15
Samsung has big plan for India; MoU Signing with Government of Tamil Nadu on March 15 மாபெரும் திட்டம்.. தமிழ்நாடு அரசுடன் சாம்சங் ஒப்பந்தம்.. ஆப்பிள் நிறுவனம் ஷாக்..!