நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றிருப்பது குறித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி பேசும்போது, ‘4 மாநில தேர்தல், குறிப்பாக உபி தேர்தல் முடிவுகள் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்,’ என்று தெரிவித்தார். இது குறித்து தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவுக்கான தேர்தல் போர் 2024ல் நடத்தப்பட்டு வெல்வது யார் என்பது அப்போதுதான் முடிவு செய்யப்படும். மாநிலத் தேர்தல் வெற்றிகளை வைத்து பாஜ உருவாக்கும் கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.