ரஷியா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடைவிதித்தது. மேலும் பல்வேறு நிறுவனங்களும் ரஷியாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளது.
இந்தநிலையில் ரஷிய அதிபர் புதின் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
ரஷியா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். இது உலகளாவிய வினியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதார தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும். இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.