சர்வதேச பணப் பரிவர்த்தனை நிறுவனமான வெஸ்டர்ன் யூனியன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், ரஷ்யா மற்றும் பெலாரசில் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்காக பல்வேறு வகையான பங்குதாரர்களுடன் பேசி வருவதாகவும் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் கூறியுள்ளது.