ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால் ரஷ்யா பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் எந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டதோ அந்த நாட்டுடன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய இயலாது. அந்த வகையில், அண்மையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடைவிதித்தது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதெடர்பாகப் பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய மற்றும் மிகமுக்கிய உர உற்பத்தியாளர்களில் ரஷ்யாவும் ஒன்றாக இருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளதால், உலகளாவிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயரக்கூடும்” எனத் தெரிவித்தார்.