ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் பொருளாதார தடைகளால் உலகளவிலான உணவு பொருட்களின் விலை உயரக்கூடும் அபாயம் இருப்பதாக அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய அரசுத்துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் சட்டவிரோதமானது என்றும் தடையால் ஏற்படும் பிரச்சினைகளை ரஷ்யா அமைதியாக தீர்க்கும் என்றார்.
எரிவாயு விநியோகம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து பெரும்பாலான உரம் மற்றும் வளங்கள் ஏற்றுமதியாவதால் விரைவில் உலகளவிலான உணவுப் பொருள் மற்றும் இறுதிக் கட்ட பணிகளுக்கு தேவையான பொருட்களின் விலை உயரும் என புதின் எச்சரிக்கை விடுத்தார்.