உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அண்டை நாடுகள் விதித்து வருகின்றன. இதற்கிடையில் பலவேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
எனினும் இந்த பிரச்சனைக்கும் மத்தியில் இந்தியா மெளனம் காத்து வருகின்றது. எனினும் ரஷ்யாவுக்கு அதிகரித்து வரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பாளரான ஓஎன்ஜிசி விதேஷ் ரஷ்யா எண்ணெய் டெண்டரில் ஏலம் பெறத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவல்களின்படி, ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவின் சோகோலின் 7,00,000 பேரல்கள் விற்பனைக்கான டெண்டரில் ஏலம் பெறத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யா இதை கட்டாயம் செய்யாது.. குண்டை போட்ட பின்ச்..!
2வது பெரிய இந்திய நிறுவனம்
இது ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பிப்ரவரி 24-க்கு பிறகு, ஒஎன்ஜிசி விதேஷின் முதல் ஏலம் இதுவாகும். ஒஎன்ஜிசி விதேஷ் இந்தியாவின் சிறந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமாகும். இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சுத்திகரிப்பாளராகும். இந்த நிறுவனம் சர்வதேச அளவில் பல்வேறு திட்டங்களில் கணிசமான பங்கினை தன் வசம் வைத்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மூன்று திட்டங்களில் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.
சகலினில் 20% பங்கு
அதில் ரஷ்யாவின் சகலின் (Sakhalin) – 1 திட்டத்திலும் 20% பங்கினைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஏலம் தான் முடிவடைந்துள்ள நிலையில் ஏலத்தில் ரஷ்ய எண்ணெய்யை யாரும் வாங்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் ஏலத்தில் 11 நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், பின்னர் வருத்தம் தெரிவித்து பலரும் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மாற்று திட்டம் என்ன?
இதற்கிடையில் ஒஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் அதன் துணை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் மற்றும் மங்களூர் ரீஃபைனரி, பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சரக்குகளை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து உண்மை நிலவரம் என்பது பற்றி வெளியாகவில்லை.
ரஷ்யாவுக்கு தடை
கடந்த சில தினங்களூக்கு முன்பு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் கேஸ் வாங்க அமெரிக்கா தடை விதித்தது. இந்த நிலையில் ஷெல் உள்பட சில மேற்கத்திய நிறுவனங்களும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தடை செய்வதாக கூறின. ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் இருந்தாலும், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை நிலவரம் என்ன?
இந்த நிலையில் ஓஎன்ஜிசி இந்த ஏலத்தில் ஏலம் பெற தவறவிட்டதா? அதன் துணை நிறுவனங்கள் மூலம் கொண்டு வரப்படுமா? அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இப்படி நடந்துள்ளதா? என பல கேள்விகளுக்கும் மத்தியில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்.
ONGC tries to sell russian oil: buyers sent a regret: why?
ONGC tries to sell russian oil: buyers sent a regret/ரஷ்ய எண்ணெய் ஏலத்தில் தோல்வியை கண்ட ONGC.. வருத்தம் தெரிவித்த நிறுவனங்கள்.. ஏன்?