சென்னை:
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை சுப்ரீம்கோர்ட்டு ஏற்க மறுத்து மனுவை நிராகரித்தது.