பங்கு சந்தைகளின் போக்கு சமீபத்திய வாரங்களாகவே கடந்த சில வாரங்களாகவே நிலையற்றதாக இருந்து வருகின்றது. இந்த நெருக்கடியான நிலையில் பங்கு சந்தையில் முதலீடா? எப்போதுமே வேண்டாம் என நினைப்பவரா நீங்கள்? அப்படி எனில் நிச்சயம் இந்த பதிவினை படியுங்கள்.
பங்கு சந்தை முதலீட்டினை பொறுத்தவரையில் குறுகிய கால முதலீட்டாளர், இன்ட்ராடே வர்த்தகர்கள் நஷ்டத்தில் இருந்தாலும், நீண்டகால முதலீட்டாளர்கள் நல்ல லாபகரமாகத் தான் உள்ளனர்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது பென்னி பங்கினை பற்றித் தான். அந்த பங்கின் பெயர் டைன் அக்ரோ. இந்த நிறுவனம் 2022ம் ஆண்டில் 763% ஏற்றம் கண்டுள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ பங்கு.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
எவ்வளவு ஏற்றம்?
இது கடந்த டிசம்பர் 31, 2021ல் 6.8% ஆக ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்தது. இதே மார்ச் 10, 2022ல் 58.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் டிசம்பர் 2021ல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், இன்று அதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய்க்கு மேல். இதே காலகட்டத்தில் 4.79% இழப்பினைக் கண்டுள்ளது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
கடந்த அமர்வில் இந்த மைக்ரோ கேப் ஃபண்டின் விலையானது 4.94% சரிவினைக் கண்டு லோவர் சர்கியூட் ஆகி, 58.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டைன் அக்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்-ஜூக்கும் மேலாக இருந்து வருகின்றது. இந்த பங்கின் விலையானது கடந்த அமர்வில் 124% ஆகவும், ஒரு வாரத்தில் 15.32% ஏற்றம் கண்டுள்ளது. எனினும் கடந்த 2 அமர்வுகளில் இந்த பங்கின் விலையானது, 9.64% குறைந்துள்ளது.
52 வார உச்சம் & குறைந்தபட்ச விலை
இதற்கிடையில் இந்த பங்கின் சந்தை மூலதனமானது 33.30 கோடி ரூபாயாக உள்ளது. இந்த 52 வார பங்கின் விலையானது 3.90 ரூபாயாக உள்ளது. இதே இதன் 52 வார உச்ச விலையானது 61.75 ரூபாயாகும். இது நடப்பு ஆண்டின் மார்ச் 9 அன்று தொட்டது குறிப்பிடத்தக்கது.
பங்கு விகிதம்
இந்த நிறுவனத்தில் 3714 பொது பங்கு தாரர்கள் 100% பங்கினை வைத்துள்ளனர். 3659 பொது பங்குதாரர்கள் 42.63% அல்லது 24.18 லட்சம் பங்குகள்2 லட்சம் மூலதனத்துடன் வைத்துள்ளனர். 26 பங்கு தாரர்கள் 51.56% அல்லது 29.24 லட்சம் பங்குகளை 2 லட்சம் ரூபாய்க்கு மேலான மூலதனத்துடன் வைத்துள்ளனர்.
லாப விகிதம்
டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 950% அதிகரித்து, 0.51 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 0.06 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் விற்பனையானது 4.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் விற்பனையானது எதுவும் செய்யப்படவில்லை.
நிதியாண்டு நிலவரம்
இதே மார்ச் 2021வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 231.25% அதிகரித்து, 0.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மார்ச் 2020ல் 0.16 கோடி ரூபாயாக இழப்பினை கண்டிருந்தது. இதே 2021 நிதியாண்டில் விற்பனையானது 0.33 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதே மார்ச் 2020ல் விற்பனை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2008 மார்ச் முதல் 11 நிதியாண்டுகளில் 10 ஆண்டுகளில் விற்பனை எதுவும் இல்லை.
சப்ளை
டைன் அக்ரோ நிறுவனம் இந்திய ஆளவில் ஜவுளி, கம்பளி மற்றும் பர்னிச்சர் பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். இது கடந்த 1994ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்தியா முழுவதும் ஆடை மற்றும் பர்னிச்சர் சப்ளை செய்து வருகின்றது.
from Rs.7 to Rs.59: this penny stock turned into a multibagger in current year
from Rs.7 to Rs.59: this penny stock turned into a multibagger in current year/ரூ.7 டூ ரூ.59.. பென்னி பங்கு கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?