வாயால் கெட்ட ஓலா.. 8 மிஸ்டு கால் நோட்டிபிகேஷனால் கடுப்பான மக்கள்..!

இந்த வேகமாக நகர்ந்து வரும் டிஜிட்டல் வர்த்தக உலகில் அனைத்தையும் வாய்ப்பாகவும், வர்த்தகமாகவும் பார்க்கும் எண்ணம் மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. அப்படி நாட்டின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா சமீபத்தில் செய்த ஒரு விளம்பரம் இணைய வாசிகள் மத்தியில் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து டிவிட்டர், லின்கிடுஇன் எனச் சமுக வலைத் தளத்தில் ஓலா-வை மக்கள் கழுவி கழுவி ஊற்ற துவங்கியுள்ளனர். இப்படி என்ன பிரச்சனை நடந்தது தெரியுமா..?

மீண்டும் சரிவை காணும் இந்திய ரூபாய்.. மீள வழியே இல்லையா?

ஓலா

ஓலா

டிஜிட்டல் வர்த்தக உலகில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் நோட்டிபிகேஷன் மூலம் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது கிளிக்பெயிட் டைட்டில் கொண்டும் விளம்பரம் செய்யும். அந்த வகையில் ஓலா செய்த ஒரு மார்கெட்டிங் ஸ்டென்ட் இந்நிறுவனத்திற்குப் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.

Ola Dash சேவை

Ola Dash சேவை

ஓலா நிறுவனம் சமீபத்தில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையில் இறங்கியது. இப்புதிய சேலையின் பெயர் Ola Dash. இப்பிரிவின் வர்த்தகத்தை மேம்படுத்த சுமார் 40 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது, இந்தத் தள்ளுபடியைப் பிரபலப்படுத்துவதற்காக ஓலா நிறுவனம் தனது செயலியில் ஒரு நோட்டிபிகேஷன் அனுப்பியுள்ளது.

8 மிஸ்டு கால்
 

8 மிஸ்டு கால்

இந்த நோட்டிபிகேஷனின் முதல் வரியில் அம்மாவிடம் இருந்து 8 மிஸ்டு கால் என்றும் 2வது வரியில் Ola Dash-ல் காய்கறி மற்றும் பழங்களுக்கு 40 சதவீத தள்ளுபடி என்றும், வெளியில் உணவு சாப்பிடுவதையும் நிறுத்த சொல்கிறார் எனக் குறிப்பிட்டு இருந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால் முதலில் இந்த நோட்டிபிகேஷனை பார்க்கும் போது 95 சதவீதம் பேர் முதலில் பார்ப்பது “8 missed calls from mom” என்பதைத் தான். இதனால் பலரும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் எரிச்சல் அடைந்தும் உள்ளனர்.

கேவலமான ஐடியா

கேவலமான ஐடியா

குறிப்பாகச் சமீபத்தில் தாயை இழந்தவர்கள், பெற்றோர்களை விட்டுத் தொலைவில் வசிப்பவர்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் உங்களுடைய 40 சதவீத தள்ளுபடி போன்ற கேவலமான விஷயத்திற்கு இப்படியா விளம்பரம் செய்வீர்கள் எனத் திட்டி தீர்த்து உள்ளனர்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இதேபோலவே இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட் பெண்கள் தினத்தைக் கொண்டாட கிட்சன் பொருட்களை வெறும் 299 ரூபாயில் இருந்து வாங்குங்கள் என நோட்டிபிகேஷன் அனுப்பியது. இதில் கடுப்பான நெட்டிசன்ஸ் சமுகவலைதளத்தில் பிளிப்கார்ட்-ஐ திட்டி தீர்த்த நிலையில் பிளிப்கார்ட் மன்னிப்பு கேட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola’s ‘8 missed calls from mom’ Notification triggers netizens just like on flipkart

Ola’s ‘8 missed calls from mom’ Notification triggers netizens just like on flipkart வாயால் கெட்ட ஓலா.. 8 மிஸ்டு கால் நோட்டிபிகேஷனால் கடுப்பான மக்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.