விக்ரம் படத்தின் அறிவிப்பால் கடுப்பான ரசிகர்கள்..!என்ன காரணம் தெரியுமா ?

உலகநாயகன்
கமல்
நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் 2 . கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பிறகு கமலின் படங்கள் ஒன்றுகூட வெளியாகாதது அவரின் ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் நடித்த இந்தியன் 2 திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில் கமல் அரசியல், பிக் பாஸ் நிகழ்ச்சி என பிஸியானார். அதைத்தொடர்ந்து கடந்தாண்டு
லோகேஷ் கனகராஜ்
இயக்கத்தில்
விக்ரம்
படத்தில் கமல் நடிப்பதாக வந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைந்தனர்.

அநியாயத்திற்கு சிக்கலில் சிக்கிவரும் சூர்யா…போலீசில் புகார் அளித்த கட்சியினர்..!

எங்கே இவர் அரசியல், டிவி நிகழ்ச்சி என அப்படியே சினிமாவில் நடிக்காமல் போய்விடுவாரோ என்று பயந்துகிடந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஆறுதலை தந்தது. மேலும் இப்படத்தில் கமலுடன்
விஜய் சேதுபதி
மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோரும் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்று காலை லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தார். இதையொட்டி எதிர்ப்பரப்பில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிகிறது.

அந்த அறிவிப்பு என்னவென்றால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை வருகின்ற மார்ச் 14 ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு கடந்த மாதமே வெளியான நிலையில் தற்போது அப்டேட் விடப்போகின்றோம் என்பதற்கு ஒரு அப்டேட் விட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் மார்ச் 14 தேதிக்காக ஆவலாக காத்துக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.