சென்னை: விளிம்புநிலை மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆட்சியர்கள் முன்னுரிமை தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார். பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல், சான்றிதழ் வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதலில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.