ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பியூச்சர் குரூப்-ன் 200 கடைகளைக் கைப்பற்றிய நிலையில், நேற்று 950 கடைகளுக்கான சப்லெட் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து உள்ளது. இதனால் பியூச்சர் குரூப் இந்த 950 கடைகளுக்கான குத்தகை பணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் இல்லையெனில் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாமல் ரத்தாகும்.
இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்த 950 கடைகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த 950 கடைகளையும் புதிய பிராண்டின் கீழ் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகக் குழு.
பரபர தேர்தல் முடிவுகள்.. ஏற்ற இறக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. மெட்டல்ஸ், ஆட்டோ பங்குகள் கவனம்!
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றிய 200 பியூச்சர் குரூப் கடைகள், தற்போது கைப்பற்றத் திட்டமிடும் 950 கடைகள் அனைத்தையும் ஸ்மார்ட் பஜார் என்ற புதிய பிராண்டின் கீழ் வர்த்தகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைவிட முக்கியமாகப் பல கடைகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஸ்மார்ட் பஜார் என்ற பெயருடன் வர்த்தகத்தைத் துவங்கத் திட்டமிட்டு உள்ளது.
ஸ்மார்ட் பஜார்
ஸ்மார்ட் பஜார் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆடை வர்த்தகத்தை முதன்மைப்படுத்தி வர்த்தகம் செய்ய உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் சூப்பர்மார்கெட் சேவை அளிக்கப்பட்டாலும், பிக் பஜார் வாடிக்கையாளர்களுக்குப் பழைய வர்த்தக முறையுடன் இணைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்காகவே ஸ்மார்ட் பஜார் என்ற பெயரையும் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
950 கடைகள்
தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ள 950 கடைகள் பிக் பஜார் போன்ற பெரிய கடைகள் இருப்பது மட்டும் அல்லாமல் ஈசிடே, ஹெரிடேஜ் போன்ற பிரண்டின் சிறிய கடைகளும் உள்ளது.
7 Eleven
இந்தக் கடைகளை ரிலையன்ஸ் நிர்வாகம் சமீபத்தில் கைப்பற்றிய 7 Eleven மற்றும் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகளாகவும், FBB கடைகள் ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் கடைகளாகவும் மாற்றத் திட்டமிட்டு உள்ளது.
பணிகள் துவங்கியது
ரிலையன்ஸ் தற்போது குளிர்சாதனங்கள், ஸ்டாக்கிங் அலமாரிகள், விளக்குகள், குளிரூட்டிகள், உறைவிப்பான்கள், பில்லிங் இயந்திரங்கள், ட்ராலிகள் மற்றும் எஸ்கலேட்டர் இயந்திரங்கள் போன்ற அனைத்து சொத்துக்களையும் கடைகளில் இருந்து அகற்றி ஃபியூச்சர் குழுமத்திடம் ஒப்படைக்கிறது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் பியூச்சர் குரூப் வைத்துள்ள 17000 கோடி ரூபாய் கடனின் உரிமையாளர்களுக்குச் சேர வேண்டியது.
ரிலையன்ஸ் ஆதிக்கம்
மேலும் கடந்த ஒரு வருடமாகப் பிக் பஜார், ஈசி டே, ஹெரிடேஜ், FBB பிரண்டுகளின் கீழ் இருக்கும் 835 கடைகளுக்கு ரிலையன்ஸ் ரீடைல் தான் பொருட்களைச் சப்ளை செய்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்டரல் மற்றும் பிராண்ட் பேக்டரி பிராண்டுகளின் கீழ் 110 கடைகள் ரிலையன்ஸ் ரீடைல் தான் நிர்வாகம் செய்கிறது.
விரைவில் தீர்வு
இந்த நிலையில் தற்போது இந்த 950 கடைகளின் சப் லெட் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படும் பட்சத்தில் பியூச்சர் குரூப் நிர்வாகம் செய்ய வேண்டும் இல்லையெனில் கடைகளை மூட வேண்டும். இதனால் ரிலைன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் – அமேசான் மத்தியில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டும். இல்லையெனில் பியூச்சர் குரூப் மொத்தமாக இழுத்து மூட வேண்டியது தான்….
Reliance Retail to set up Smart Bazaar stores by March 31 in Future retail store locations
Reliance Retail to set up Smart Bazaar stores by March 31 in Future retail store locations ‘ஸ்மார்ட் பஜார்’ முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. மார்ச் 31-க்குள் அதிரடி அறிவிப்பு..!