உத்தர பிரதேசம் மாநில, நொய்டா தொகுதியில் பாஜ வேட்பாளராக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் போட்டியிட்டார். இத்தொகுதியில் மொத்த உள்ள 2,74,473 வாக்குகளில் பங்கஜ் சிங் 1,93,185 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்சாடி வேட்பாளர் சுனில் சவுத்ரி 47,962 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் கிருபா ராம் சர்மா 13,251 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பன்குரி பதக் 11,167, ஆம் ஆத்மி வேப்டாளர் பங்கஜ் அவனா 5,147 வாக்குகளும் பெற்றனர். மற்ற அனைவரும் சொற்ப வாக்குகளே பெற்றனர். நோட்டாவுக்கு 2018 வாக்குகள் விழுந்தது. இதன் மூலம் 1,45,223 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பங்கஜ் சிங் ருசித்தார்.