உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 40 வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.
5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் எரிபொருள், உணவு, ரியல் எஸ்டேட், நகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்ததன் மூலம் யாரும் எதிர்பார்க்காத வகையில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டு உள்ளது.
அமெரிக்கப் பணவீக்கம்
அமெரிக்காவின் பிப்ரவரி மாத நுகர்வோர் விலைக் குறியீடு 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது ஜனவரி மாதத்தில் 7.5 சதவீதமாக இருந்தது என அந்நாட்டுத் தொழிலாளர் துறை தரவுகள் கூறுகிறது. உலகளவில் பரவலாகப் பின்பற்றப்படும் பணவீக்க அளவீடுகள் பிப்ரவரி மாதத்தில் முந்தைய மாதத்தை விடவும் 0.8% உயர்ந்தது.
விலைவாசி
அமெரிக்காவின் பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணம் பெட்ரோல், உணவு மற்றும் தங்குமிடம் செலவுகளை அதிகரிப்பு தான். மேலும் உணவு விலை தடுமாற்றம், எனர்ஜி பொருட்கள் விலை உயர்வைக் கழித்துவிட்டாலும் பணவீக்க அளவீடுகள் பிப்ரவரி மாதத்தில் முந்தைய மாதத்தை விடவும் 0.5% உயர்ந்துள்ளது.
வட்டி விகிதம்
மார்ச் மாத இறுதிக்குள் அமெரிக்கப் பெடரல் வங்கி அந்நாட்டுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி 0.50 சதவீதம் வரையிலான வட்டியை உயர்த்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள்
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் அனைத்துப் பொருட்கள் விநியோகத்திலும் போக்குவரத்திலும் எரிபொருள் முக்கியப் பங்கு வகிக்கிறது. உற்பத்தித் துறையில் பணவீக்கம் அதிகரிக்க உலோகம் மற்றும் பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
U.S. Inflation Hit Fresh 40-Year High of 7.9 percent
U.S. Inflation Hit Fresh 40-Year High of 7.9 percent 40 வருட உச்சத்தில் பணவீக்கம்.. மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட அமெரிக்கா..!