5 மாநில தேர்தல் முடிவு: இந்தியாவின் அரசியல் வரைபடம் எப்படி மாறியுள்ளது?

5 மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இந்தியாவின் அரசியல் வரைபடம் சில முக்கிய மாறுதல்களை கண்டிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 4 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதனால் அக்கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆகவே நீடிக்கிறது. அந்தவகையில் இந்திய அரசியல் வரைபடத்தில், கட்சிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்ற விவரம் இங்கே:  
image
பாஜக – உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, உத்தராகண்ட், இமாசல பிரதேசம், கோவா, அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், திரிபுரா
பாஜக கூட்டணி கட்சிகள் – பீகார், புதுச்சேரி, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம்
காங்கிரஸ் – ராஜஸ்தான், சட்டீஸ்கர்
காங்கிரஸ் கூட்டணி – மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட்
மற்ற கட்சிகள் – டெல்லி (ஆம் ஆத்மி), பஞ்சாப் (ஆம் ஆத்மி), தமிழ்நாடு (திமுக), கேரளா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆந்திரா (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), தெலங்கானா (தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி), மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்), ஒடிஷா (பிஜூ ஜனதா தளம்)
துணை நிலை ஆளுநர் ஆட்சி – ஜம்மு காஷ்மீர், லடாக்
இதை வீடியோ வடிவில் இங்கு காண்க:

சமீபத்திய செய்தி: ‘பேட் வுமன்’ – நவ்ஜோத்சிங் சித்துவை தோற்கடித்த ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் யார்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.