Tamil Health Food For Diabetes Patients : உலகளவில் தற்போது அதிகப்படியான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் இந்நோய் உயிரை பறிக்கும் முக்கிய நோய் தொற்றுகளில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நோய்க்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
உடல்லி ரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுக்குள் வைக்க பல்வேறு ஆங்கில மருத்துவ முறைகள் வந்திருந்தாலும், இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை வைத்து சர்க்ரை நோய் கட்டுக்குள் வைக்கலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. .
அந்த வகையில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதில், பூண்டுக்கு பெரிய பங்கு உண்டு. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட், ஆன்டி ஃபங்கல் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழி செய்கிறது.
பூண்டை சர்க்கரை நோயாளிகள் எப்படி எடுத்துக்கொள்வது?
பூண்டு – 6 பல்
தண்ணீர் – 300
மில்லி சீரகம் – ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் 300 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில்,.தோல் உரித்து தட்டி வைத்திரக்கும் பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைக்க வேண்டும்.
அதன்பின் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தை மூடிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அதை திறந்து பார்த்தால் புண்டு சாறு சீரகத்தின் தன்மை தண்ணீரில் இருக்கும்.
இந்த நீரை வடிகட்டி ஒரு கப் அளவுக்கு தினமும் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்
நன்மைகள்
பூண்டு உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் இன்சுலின் செயல்திறன் மேம்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளின் அமிகோ அமில ஹோமோசிஸ்டீனை குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை மேம்படுத்துகிறது.
உயிரிணுக்களின் மீள் உருவாக்கத்த செயல்படுத்துவதால், கணையத்தில் பீட்டா செயல்களை மேம்படுத்துகிறது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பூண்டு தண்ணீர் மிகுந்த நன்மைகளை கொடுக்கிறது.