Petrol and Diesel Price: சென்னையில் 127வது நாளாக விலைமாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ₨101.40-க்கும், டீசல் ஒரு லிட்டர் ₨91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamilnadu news update:
சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.
இந்தாேனிஷியா, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க காரி வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
India news update:
5 மாநில தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியாகின. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது. உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், காேவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது.
World news update:
ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது அமேசான்
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் அமேசான் நிறுவனம் நிறுத்தியது.
வணிக செயல்பாடுகளை நிறுத்திய அமெரிக்க வங்கிகள்
ரஷ்யாவில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக அமெரிக்க வங்கிகள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க வங்கிகளான கோல்டன் சாச்ஸ் குரூப் மற்றும் ஜேபிமோர்கன் சேஸ் ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
1 லட்சம் பேர் வெளியேற்றம்
கடந்த 2 நாட்களில் 1 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த பிப். 27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த வழக்கில், மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், வீரபாண்டி தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில்’ சசிகலா உறவினரான இளவரசியின் மருமகன் ராஜராஜனுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கு வரும் 26ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டி சிறப்புகூறு துணைத் திட்ட நிதியை முழுமையாக செலவிடவில்லை என குற்றம்சாட்டி, தலித் அமைப்பினர் புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டனர்.
உக்ரைன் நாட்டின் வோல்னோவாக நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு,
ரஷ்யாவில் திரைப்பட வெளியீட்டையும், வணிகங்களையும் நிறுத்திக் கொள்வதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
தங்கள் முதலமைச்சர், அமைச்சர்கள், MLAக்களின் பேச்சானது கருத்தோடும், கண்ணியத்தோடும் இருக்கும் என்று திமுகவிற்கு நம்பிக்கை இருக்குமானால் தனியார் தொலைக்காட்சிகளை’ சட்டமன்றத்தில் அனுமதித்து ஒளிபரப்பு செய்யச் சொல்லலாமே? எந்தச் செலவுமின்றி முழுநேரடி ஒளிபரப்பு சாத்தியமாகும். திமுக தயாரா? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு மத்திய சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்ஜாமின் கோரி சசிகலா மற்றும் இளவரசி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மாதம் ஒருமுறை ‘வரும் முன் காப்போம்’ முகாம் நடைபெறும் என மாநகராட்சி மேயர் பிரியா அறிவிப்பு!
கர்நாடகா, பெங்களூரு சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சொகுசு வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் மீது’ ஊழல் தடுப்பு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் இன்று விசாரணை தொடங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சகிகலா ஆஜர்.
தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
தமிழ்நாட்டில் முதன்மை பல்கலைக்கழமாக பாரதியார் பல்கலைக்கிழகம் விளங்குகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி முதன்மையானது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
உ.பி தேர்தல் முடிவுகள் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருந்தாலும் தொண்டர்கள் மனம் தளராமல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.23 புள்ளிகள் உயர்ந்து. 55,665.62 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.95 புள்ளிகள் அதிகரித்து 16,636.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
மாவட்டங்கள் தோறும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிகிறார். மாநாடு இறுதியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்க உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு தொடங்கியது. காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 25 பேரை செஷல்ஸ் கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்தனர்.! ஏற்கனவே குமரி மாவட்ட மீனவர்கள் 33 பேரை செஷல்ஸ் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 4,194 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது பாஜக. இதையடுத்து, அந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராகிறார்.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்ய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகே 64 கி.மீ. நீளம் ரஷ்ய படைகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் போலந்தில் இருந்து 242 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து போலந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து இவர்கள் தாய்நாடு திரும்பினர்.