ஆமதாபாத்: ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ல் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 1248 நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து இணை செயலாளர் மன்மோகன் வைத்யா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
*இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா காரணமாக நின்று போன சங்கப் பணிகளில் 98.6% மீண்டும் துவங்கியுள்ளன.
* தினசரி முகாம்களில் 61% மாணவர்களுக்கானவை, 39% பெரியவர்களுக்கானவை.
* 59000 மண்டலங்களில் 41% மண்டலங்களில் முகாம் நடைபெறுகிறது.
* 2303 நகரங்களில் 94% நகரங்களில் முகாம் நடைபெறுகிறது
* அடுத்த 2 வருடங்களுக்குள் அனைத்து நகரங்களிலும் முகாம் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* கொரோனாவின் போது சமுதாயத்துடன் இணைந்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பணியாற்றினார்கள். நாடு முழுவதும் 5.50 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட்டார்கள்.
* சங்கத்தின் குடும்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி, பசுப் பாதுகாப்பு, கிராம முன்னேற்றம் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
* 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 20 முதல் 35 வயதுக்குட்பட்ட சுமார் 1 முதல் 1.25 லட்சம் இளைஞர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைய ஆன்லைன் மூலம் விருப்பம் தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement