இந்தியாவில் நேரடியாக சில்லறை விற்பனை கடைகளை திறக்கும் திட்டம் இல்லை என சர்வதேச சூப்பர் மார்க்கெட் ஜாம்பவனான வால்மார்ட் தெரிவித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட், ஃபோன் பே போன்ற நிறுவனங்களை வாங்கி நடத்துவது போல் மேலும் சில நிறுவனங்களை வாங்குவதில் கவனம் செலுத்த உள்ளதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன் தெரிவித்தார். ஃப்ளிப்கார்ட் மற்றும் ஃபோன் பே-வில் செய்த முதலீடு திருப்திகரமான பலன்களை அளித்துவருவதாக அவர் கூறினார். இவ்விரு நிறுவனங்களையும் சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்து 600 கோடி டாலர் கொடுத்து வால்மார்ட் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM