வாஷிங்டன்-இந்தியா நிதி நிர்வாகத்தை சிறப்பாக கையாள்வதாக, சர்வதேச நிதியம் பாராட்டியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், உக்ரைன் போர் தாக்கம் தொடர்பாக சர்வதேச நிதியத்தின் மாநாடு நடந்தது. இதில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா பேசியதாவது:இந்தியா நிதி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக கையாள்கிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதன் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சவாலை சமாளிக்க, இந்தியா சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் விலை உயர்வு பாதிப்பில் இருந்தும், சாமான்ய மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இம்மாநாட்டில், சர்வதேச நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குனரான கீதா கோபிநாத் கூறியதாவது:உக்ரைன் போர், இந்தியா உட்பட பல உலக நாடுகளை பாதித்துள்ளது. இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனை பாதிக்கும்.
இந்தியாவில், பணவீக்கம், 6 சதவீதத்தை நெருங்கியுள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் அதிகப்பட்ச இலக்காகும். உக்ரைன் போர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement