தங்கம் விலையானது கடந்த வாரத்தில் அதன் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டிய நிலையில், வார இறுதியில் சற்றே சரிவினைக் கண்டது. இது வரும் வாரத்திலும் தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இது இந்திய சந்தையில் 55,000 ரூபாய் என்ற லெவலில் 53000 ரூபாய் என்ற லெவலுக்கு குறைந்துள்ளது.இது வாங்க சரியான இடமா? அல்லது இன்னும் குறையுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் இன்று சர்வதேச கமாடிட்டி மற்றும் இந்திய கமாடிட்டி சந்தைககளுக்கு விடுமுறையாகும். ஆக ஆபரணத் தங்கத்தின் விலை என்ன? வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
NSE-யை ஆட்டிப்படைத்த இமயமலை மர்ம சாமியார் இவர்தானா? உண்மையை போட்டுடைத்த CBI..!
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
நாளுக்கு நாள் ரஷ்யா – உக்ரைன் இடையேயான உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த பதற்றம் குறையவே குறையாதா? அடுத்து என்ன ஆகும். தற்போது உக்ரைன் மக்களுக்கே போர் பயிற்சியினை கொடுத்து வருகின்றது. ஆக இந்த பிரச்சனைக்கு முடிவு வராது என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. இதற்கிடையில் போரால் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர் எனில், மறுபுறம் ஊணவு, நீர் பாதுகாப்பான தங்குமிடம் இல்லாமலே பலரும் தவித்து வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரம் என்பதை தாண்டி மக்கள் அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சப்ளை சங்கிலியில் பாதிப்பு
ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் இவ்விரு நாடுகளின் வணிகம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சப்ளை சங்கிலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல உலோகங்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலையும் வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளது. இது தொடரும் பட்சத்தில் இந்த பிரச்சனையானது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
விலை அதிகரிக்கலாம்
ஆக மேற்கண்ட பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் தங்கம் விலையானது மீண்டும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதுவும் நடப்பு வாரத்தில் தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்றே குறைந்துள்ள நிலையில், இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
உச்சம் தொடும் பணவீக்கம்
தொடர்ந்து அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வருகின்றது. இது ஏற்கனவே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில் இந்தளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. இது இனி வாரங்களிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன. இதுவும் தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்
வரும் வாரத்தில் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் 5 முறை வட்டி அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினால், பல்வேறு காரணிகளும் தங்கத்திற்கு எதிராகவே உள்ளன.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் அடுத்த சப்போர்ட் விலையானது அவுன்ஸூக்கு 1970 டாலர்களாக உள்ளது. இதனை உடைத்தால் 1920 டாலர்களை தொடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உக்ரைன் ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தங்கத்தின் விலையை பல காரணிகளும் தூண்டலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 52,000 – 52500 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் எனவும், இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 49000 ரூபாயினை வைத்துக் கொள்ளலாம் எனவும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
புராபிட் புக்கிங் இருந்திருக்கலாம்
நடப்பு வாரத்தின் இறுதியில் வர்த்தகர்கள் தங்களது லாபத்தினை புக் செய்திருக்கலாம் என்பதால், தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. ஆனால் வரும் வாரத்தில் இது இருக்குமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் வாரத் தொடக்கம், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு, ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை பொறுத்தே இருக்கலாம்.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 4894 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 39,152 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 5339 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து, 42,712 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,390 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 0.10 பைசா அதிகரித்து, 74.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 747 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வரும் வாரத்தில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. இதே நீண்டகால நோக்கிலும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் இன்னும் லாபம் கூடுதலாக கிடைக்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 12th 2022: gold price dips after testing 19 month high, is it a right time to buy?
gold price on march 12th 2022: gold price dips after testing 19 month high, is it a right time to buy?/இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. மீண்டும் சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?