கடந்த வருட 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது.
இப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழி மூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இப்பரீட்சையின் போது கோவிட் -19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.