பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபிள் டவரில் ஏவுகணை தாக்குதல் நடைபெறுவது போன்ற கிராபிக் காட்சிகளை உக்ரைன் பாதுகாப்பு துறை வெளியிட்டது இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா 17வது நாளாக தனது போர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபிள் டவரில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்று மக்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்கும் தெறித்து ஓடுவது போன்ற கிராபிக் காட்சிகளை உக்ரைன் பாதுகாப்பு துறை வெளியீட்டுள்ளது.
#ifwefallyoufall ❗️@NATO close the sky over Ukraine! pic.twitter.com/kRWIQlU9Pn
— Defence of Ukraine (@DefenceU) March 12, 2022
அதில் இறுதியாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த தகவலில் “ஐரோப்பிய நாடுகளின் தலைநகரில் இந்த நிலைமை ஏற்படுவதை நினைத்து பாருங்கள், இதனை போன்று நடைபெற கூடாது என்று தான் நாங்களும் நினைக்கிறோம், அதனால் தயவு செய்து உக்ரைன் வான் எல்லையை மூடுங்கள் அல்லது எங்களுக்கு எதிர்த்து போராட போர் விமானங்களை அனுப்பி வையுங்கள், “நாங்கள் வீழ்ந்தால் நீங்களும் வீழ்ந்ததாகவே அர்த்தம்” என அந்த வீடியோ பதிவு தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபிள் டவரின் அருகில் நின்று இளம்பெண் ஒருவர் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் பொது திடிரென நடத்தப்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்து விழுவது போன்றும், கட்டிடங்கள் இடிந்து விழுவதுபோன்றும் செய்யப்பட்ட இந்த கிராபிக் காட்சிகள் உக்ரைன் நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.