உக்ரைன் நாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வான்வெளி தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை தொடங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 17ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மீது பல்வேறு வகையில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் அப்டேட் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அந்நிறுவனம், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அரசின் வான்வெளி தாக்குதல் குறித்த சைரன்களை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதால், உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையை தொடங்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் வான்வெளி தாக்குதல் எச்சரிகைகளை வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.