ஜெனிவா,
உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷியா – உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரின் காரணமாக கொரானா தொற்று அதிகரிக்ககூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும், உக்ரைன் மற்றும் சில நாடுகளில் கொரானா தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதனால் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை நிறுத்தம் ஆகியவற்றின் காரணமாக கொரானா தொற்று அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45.55 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
⚡️WHO predicts rise in Covid-19 due to Russia’s all-out war in Ukraine.
The WHO said on Mar. 11 the rise would likely be due to an increase in the movement of people, low vaccination rates in Ukraine and some receiving countries, & a halt in vaccinations, treatment and testing.
— The Kyiv Independent (@KyivIndependent) March 12, 2022