உக்ரைன் நாட்டுக்கு ஆயுதம் அளிக்கும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கான எந்தவொரு இராணுவ ஏற்றுமதியும் குறிவைக்கப்படும் என ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை, தற்போது நேட்டோ நாடுகளிலும் போர் வியாபிக்கக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் விடுத்துள்ள அறிக்கையில், பல நாடுகளில் இருந்தும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புவது ஒன்றும் தங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை, ஆனால் அவை தங்களால் குறிவைக்கப்படும் சூழல் உருவாகும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போக்கை தடுக்க போதுமான நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கவில்லை எனவும், நேட்டோ நாடுகளும் போதுமான துணிச்சலை வெளிப்படுத்தவில்லை எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.
மேலும், ரஷ்ய துருப்புகள் தலைநகர் கீவ்வை தரைமட்டமாக்கினால் மட்டுமே கைப்பற்ற முடியும் எனவும், ,அதுவரையில் போராட தயாராக உள்ளோம் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மிக சாதாரணமாக கீவ் மீது குண்டு மழை பொழிந்து, இந்த பிராந்தியத்தின் வரலாற்றை மொத்தமாக அழித்து, ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்து, எங்களை மொத்தமாக கொன்று புதைத்தால் மட்டுமே அவர்களால் கீவ் நகருக்குள் நுழைய முடியும் எனவும் ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.