என்னை தவறாக வழி நடத்தியவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள் : அட்லீ
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ அதன்பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அப்பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் இந்த படத்தின் கதையும் வேறொரு படத்தின் கதையை தழுவி அட்லீ தயார் செய்திருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாகவே ஷாருக்கான் படம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுப்பற்றி இயக்குனர் அட்லீ, ‛‛சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம். உங்களது வாழ்வில் வரும். என்னை நம்புங்கள் என்று பதிவிட்டுள்ளார். அவர் எதற்காக யாரைப்பற்றி இப்படி ஒரு பதிவு போட்டு உள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் அட்லீ தற்போது ஏதோ ஒரு மிகப் பெரிய குழப்பத்தில் சிக்கி இருப்பது இந்த பதிவு மூலம் தெரியவந்துள்ளது.