தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை
நயன்தாரா
ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாரா
விக்னேஷ் சிவன்
இயக்கத்தில் காதம்பரியாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள். அண்மையில் மோதிரம் அணிந்த கையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இதயத்தில் கை வைத்திப்பதை போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ் சிவன் ‘விரலோடு உயிர் கூட கோர்த்து’ என கேப்ஷனும் போட்டிருந்தார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோடம்பாக்கத்தினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரின் திருமணத்தையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அண்மையில் தன்னுடைய அம்மா பிறந்தநாளை கொச்சியில் காதலர் விக்னேஷ் சிவனுடன் மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. அதனை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளையும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா.
ஐஸ்வர்யா எது பண்ணாலும் காரணம் இருக்கும்: வைரலாகும் குஷ்புவின் வீடியோ..!
இந்நிலையில், நயன், விக்கி இருவரும் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதில் நயன்தாரா நெற்றியில் குங்குமம் இருப்பதை பார்த்து இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக இணையத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!