சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘
முசாபிர்
‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் ஓய்வில் இருந் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார் ஐஸ்வர்யா.
‘மாறன்’ படத்துல என்னதான் பஞ்சாயத்து..?: சர்ச்சைகளை கிளப்பிய கார்த்தி நரேனின் பதிவு..!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஐஸ்வர்யா, மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திட்டமிட்டபடி ‘முசாபிர்’ பாடல் வெளியிட முடியாமல் போனது. அதனை டீசரை மட்டும் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது நடிகை
குஷ்பு
, ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஐஸ்வர்யா ஒரு வெற்றிகரமான இயக்குனர், டான்சர். அவுங்க எது பண்ணாலும் தன்னோட முன்னேற்றத்துக்காக தான் பண்ணுவாங்க. முசாபிர் ஆல்பம் பாடலோட சின்னசின்ன கிளிம்ப்ஸ் பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்கு. இந்த ஆல்பம் பாடல் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
“ராதே ஷ்யாம்” பட இயக்குநர்கிட்ட 20 வருசத்துக்கு கதை இருக்கு – ஜஸ்டின் பிரபாகரன்!