மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் விமானநிலையத்தில் இன்று நடைபெறவிருந்த விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. 55 பயணிகளுடன் தரை இறங்கிய விமானம் திடீரென ஓடுதளத்தில் இருந்து விலகி மண்தரையில் ஓடியது. இருந்தபோதிலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் விமானம் நிறுத்தப்பட்டதால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
ஏடிஆர் 72 ரக விமானம் ஒன்று இன்று காலை 11.32 மணிக்கு டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜபல்பூர் விமானநிலையத்திற்கு புறப்பட்டது. இன்று மதியம் ஜபல்பூர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது. தரையிறங்கிய பின்னர் விமான ஓடுதளத்திலிருந்து விலகி மண் தரையில் விமானம் சென்றது.
எனினும், இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. அதில் பயணித்த 55 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓடுதளத்திலிருந்து விமானம் விலகி சென்ற சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM