ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கார்கில்ஸ் பூட் சிட்டி ( Cargills food city ) ஊடாக நேற்று நேற்று முன்தினம் (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிகள் ( Cargills food city ) மற்றும் மருந்தகங்களிலும் ( Pharmacy ) ஓய்வூதியம் பெறுவோருக்கு சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பை வழங்குவதாக இத் திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும்போது மொத்த விலைப்பட்டியலில் இருந்து 5 சதவீதம் கழிவும், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு விசேட கழிவும் இதனூடாக வழங்கப்படும்.
கார்கில்ஸ் கூட்டு வியாபாரத்துடன் இணைந்த திரையரங்குகளில் டிக்கெட் வாங்கும்போது 25 சதவீத கழிவும், KFC உணவகங்களில் ரூ. 5,000 க்கு மேலான பற்றுச்சீட்டுகளுக்கு 10 சதவீத கழிவும் இதனூடாக ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும்.