இந்திய தேசிய காங்கிரஸில் மூத்த பதவிகளை வகிக்கும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய மூன்று பேரும் கட்சி பொறுப்புகளிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் காங்கிரஸ் செயற்குழுவில், 3 பேரும் தங்கிளன் ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி பொறுப்புகளில் இருந்து ராகுல்காந்தி, சேனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுத்துள்ளது.
பெயரிடப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் ராஜினாமா செய்ய போவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் நியாயமற்றது மற்றும் தவறானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.