நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதன் கொண்டாட்டமாகப் பிரதமர் நரேந்திர மோடி காந்தி நகரில் இரண்டாம் நாளாக இன்றும் திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார்.
நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மாநில பாஜக அலுவலகமான கமலம் வரை பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றார்.
இரண்டாம் நாளாக இன்று காந்திநகரில் ஊர்வலம் சென்ற பிரதமர் மோடிக்கு மேள தாளம் முழங்கச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற பொதுமக்களுக்குப் பிரதமர் கையசைத்து நன்றி தெரிவித்தார்.