குளிர்சாதனப் பெட்டிகளில் இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக வர்த்தக நிலையங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

குளிரான உணவுகளில் நிறம், மணம், தோற்றம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டால், அது மனிதர்கள் உண்ணத் தகுதியற்றதாக மாறியுள்ள்து என்பதால், இதுபோன்ற உணவுகளை விற்பதையோ, வாங்குவதையோ தவிர்க்குமாறு சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மனித பாவனைக்கு உகந்தவை அல்லாத இறைச்சி மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்த 387 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 

May you like this Video




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.