கெட்ட கொழுப்பை குறைக்கும் கடலைப்பருப்பு சுண்டல்… சிம்பிள் டிப்ஸ் பாருங்க!

 Kadalai Paruppu Sundal in tamil: பூமிக்கு மேலே விளையும் பருப்பு வகைகளில் ஒன்றான கடலைப்பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து உண்பதுடன், தனியாக சமைத்து உண்டால் இன்னும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இவை பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது.

கடலை மாவு தோல் சம்மந்தமான பிரச்சனைக்ளுக்கு தீர்வு தருகிறது. குறிப்பாக, தோலில் சுருக்கம், சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவில் நீக்கும் தன்மை கொண்டவையாக இவை உள்ளன.

கடலை பருப்பில் காணப்படும் புரதச் சத்து செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியம். எனவே, இவற்றை குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதிலும், நரம்புகள் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ஓர் உணவுப்பொருளாகவும் கடலைப்பருப்பு உள்ளது.

உடல் எடை பெருக்கவும், நல்ல செரிமானத்திற்கும் கடலை பருப்பு உதவுகிறது.

முளை கட்டிய கடலைப்பருப்பை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும்.

இப்படி ஏராளமான ஆரோக்கிய பயன்களை தன்னகத்தே உள்ளடக்கியுள்ள கடலைப்பருப்பில் எப்படி சுவையான மற்றும் சத்தான சுண்டல் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கடலைப்பருப்பு சுண்டல் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1/2 கப்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சில துளிகள்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

கடுகு – 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

கடலைப்பருப்பு சுண்டல் சிம்பிள் டிப்ஸ்:

கடலைப்பருப்பை முதலில் தண்ணீரில் சுமார் 1 மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

பிறகு அவற்றை நன்றாக அலசி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 1-2 விசில் விட்டு இறக்கவும்.

குக்கரில் உள்ள விசில் போனதும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.

இதன்பின்னர், ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு, முன்னர் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை அதனுடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

தொடர்ந்து துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.

பின்னர் கீழே இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான மற்றும் சத்தான கடலைப்பருப்பு சுண்டல் தயார்.

இப்போது அவற்றை சூடாக பரிமாறி ருசிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.