கணினிகள் மற்றும் லேப்டாப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Asus, தனது புதிய Gaming லேப்டாப்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான டீசரை அமேசான் தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 15ஆம் தேதி பகல் 12 மணிக்கு TUF, ROG ஆகிய சீரிஸ்களின் கீழ் கேமிங் மடிக்கணினிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. TUF சீரிஸ் மலிவு விலை உடனும், ROG பிரீமியம் விலையிலும் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் தளத்தில் இந்த வெளியீடு குறித்து ஆசஸ் டீஸ் செய்துள்ளது. எத்தனை லேப்டாப்கள் வெளியாகும் என்ற உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், ASUS ROG Strix G15/G17 and
ASUS TUF
Gaming A15/A17 or F15/F17 ஆகிய மாடல்கள் வெளியாவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Metaverse போன் கேள்வி பட்டிருக்கீங்களா – தொழில்நுட்ப புரட்சி செய்யவரும் HTC நிறுவனம்!
ஆசஸ் ROG Strix சீரிஸ்
இதில் ASUS ROG Strix கேமிங் லேப்டாப்பில் 240Hz வரை ரெப்ரெஷ் ரேட் கொண்ட QHD டிஸ்ப்ளே இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், Intel புராசஸர்கள் உடன் வெளியாகும் லேப்டாப்புகளில் 12th generation சிப்செட் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.
அதுமட்டுமில்லாமல், NVIDIA RTX 30-series கிராபிக்ஸ் எஞ்சினுடன் இந்த புதிய ஆசஸ் ROG Strix கேமிங் லேப்டாப் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லேப்டாப்புகள் திறன்வாய்ந்த AMD புராசஸர்கள் உடனும் வெளியாகிறது.
ஆசஸ் TUF சீரிஸ்
குறைந்த விலை ஆசஸ் கேமிங் லேப்டாப்களை பொருத்தவரை, புதிய TUF சீரிஸ் வெளியாகிறது. இந்த லேப்டாப்களில் 300Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட முழு அளவு எச்டி FHD டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த லேப்டாப்கள் ரூ.60,000 எனும் தொடக்க விலையுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. CES 2022 நிகழ்வில் இந்த லேப்டாப்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வெளியிட்டு நிகழ்வை ஆசஸ் நிறுவனம் நடத்தவுள்ளது.
Apple இப்படி செஞ்சிருக்கக் கூடாது – பயனர்கள் விரும்பிய iPhone SE-ஆ இது!
சமீபத்தில் நிறுவனம் தனது Rog Phone 5S கேமிங் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. Flipkart தளத்தில் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், கேமிங் லேப்டாப்கள் அமேசான் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
ஆசஸ் ரோஜ் போன் 5 எஸ் சிறப்பம்சங்கள் (Rog Phone 5S specifications)
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயை பொருத்தவரை 6.78″ அங்குல முழுஅளவு எச்டி+ சூப்பர் அமோலெட் இ4 சாம்சங் தொடுதிரை, 144Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட், 360Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட், ஆல்வேஸ் ஆன் HDR10+, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
செயல்திறனுக்காக 5nm குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+, குவால்காம் அட்ரினோ 660 கிராபிக்ஸ் எஞ்சின் ஆகிய சிப்செட்டுகள் கொண்டு இயக்கப்படுகிறது. Android 11, 18ஜிபி வரை ரேம் (LPDDR5), 512ஜிபி (UFS 3.1) வரை மெமரி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது.
முழு தகவல்களை படிக்க:
ஆசஸ் ரோஜ் போன் 5 எஸ்
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் DIRAC ஆடியோ, 3000mAh + 3000mAh இரட்டை பேட்டரி / 30W ROG ஹைப்பர்சார்ஜ் QC4.0 போன்ற ஆதரவும் இந்த ஸ்மாட்போனின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.49,999ஆக உள்ளது.
Read more:
iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G போனில் எல்லாமே ஸ்பெஷல் தான்!Android 12L அப்டேட்: மொழி எதுவானாலும் சரி; நாங்க தரமா காட்டுவோம்! அவ்ளோ அழகுங்க இந்த SAMSUNG 5G போன் – ஸ்பெக்கும் டாப் டக்கர்!