கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் – கீர்த்திசுரேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சாணிக்காயிதம். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது கையில் துப்பாக்கி வைத்துக் க்கொண்டிருக்கும் போட்டோ ஒன்று இப்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஆக்ஷன் கலந்த வேடத்தில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தை அடுத்து உதயநிதியின் மாமன்னன், பாலா – சூர்யா இணையும் படம் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படம் என 3 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.