பனாஜி: கோவாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கைகாட்டிய நிலையில், அவற்றை தவிடுபொடியாக்கி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில், அண்மை நிலவரப்படி பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஏற்கெனவே கணிக்கப்பட்டதைவிட திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆனால், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தான் போட்டியிட்ட சான்குவலிம் தொகுதியில் 400 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அதேபோல் பாஜகவிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கரும் பனாஜி தொகுதியில் பின் தங்கியுள்ளார்.
கோவா மட்டுமல்லாமல் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.