புதுடில்லி: ‘மாவட்ட அளவில் பெண் நீதிபதிகளை அதிகளவில் நியமிக்கும் வகையில், சட்டக் கல்வியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் சார்பில், முதல் முறையாக சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:தெலுங்கானாவில் மாவட்ட நீதிபதிகளில், 52 சதவீதம் பேர் பெண்கள். அசாமில், 46 சதவீதம்; ஆந்திராவில், 45 சதவீதம்; ஒடிசாவில், 42 சதவீதம்; ராஜஸ்தானில், 40 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர்.
இதுபோல அனைத்து மாநிலங்களிலும், சட்டக் கல்வியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதன் வாயிலாக மாவட்ட நீதிமன்றங்களில் அதிக அளவு பெண் நீதிபதிகள் நமக்கு கிடைப்பர்.பெண்களுக்கு சம உரிமை அளிப்பதை புரட்சி என்று கூறினால், அந்தப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதை நான் ஆதரிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
புதுடில்லி: ‘மாவட்ட அளவில் பெண் நீதிபதிகளை அதிகளவில் நியமிக்கும் வகையில், சட்டக் கல்வியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.