பச்சைநிறக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் அதிகம் அடங்கியுள்ளன.
முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளது.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
இதனை கொண்டு ஜூஸ் தயாரிப்பது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 50 கிராம்
மிளகு – 10
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவைக்கு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை
முட்டைக்கோஸை பொடியாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு அதனுடன் இஞ்சி, மிளகு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக அரைந்ததும் இந்த ஜூஸை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோஸ் சாறை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும்.
குறிப்பு
வாரத்தில் மூன்று நாட்கள் முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது நல்லது, குறிப்பாக முட்டைக்கோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.