ரியாத்: சவுதி அரேபியாவில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 81 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சவுதி அரேபிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, அல்கொய்தா , ஹூதி ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து பல்வேறு கொடுங்குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது . நீதிமன்றத்தில் 13 நீதிபதிகள் முன் நடந்த விசாரணையில், 81 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ஒரே நாளில் 81 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களில் 73 பேர் சவுதி அரேபியர்கள், ஏழு பேர் ஏமன் நாட்டினர், ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரியாத்: சவுதி அரேபியாவில், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 81 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.