ஜம்மு காஷ்மீரில் மூன்று வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் சேவாக்லான் என்னுமிடத்தில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் கமாண்டர் கமால் பாய் உள்ளிட்ட இருவரைச் சுட்டுக் கொன்றனர்.
கந்தர்பல் மாவட்டம் செர்ச் என்னுமிடத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதியைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதேபோல் ஹண்டுவாராவில் நெச்சமா என்னுமிடத்தில் நிகழ்ந்த மோதலில் லஸ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்றனர்.