புதுடெல்லி: டெல்லியின் கோகுல்புரியில் குடிசைப் பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசைகள் தீப்பற்றி எரிந்ததை அடுத்து அப்பகுதியில் வசித்தவர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் 13 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்து சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின் அதிகாலை 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி பலியான 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. டெல்லி தீயணைப்பு துறையின் இயக்குனர் அதுல் கார்க் கூறுகையில், ‘‘60 குடிசைகள் தீயில் சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை,’’ என்றார்.